kodaikanal
Google
 
Web www.kodaionline.com

முகப்பு

கட்டுரைகள் பகுதி

கவிதைகள்

உங்களுக்குத் தெரியுமா?

சினிமா செய்திகள்

கருத்துப் பரிமாற்றம்

விவசாயம்

பழவகைகள்

உங்கள் பக்கம்

கோடை செய்திகள்

நிகழ்வுகள்

துணுக்குகள்

காதல் கவிதைகள் பக்கம்

காதல் கவிதைகள் தொகுப்பு

துடிப்பு

கண்கள் கொண்டு
காதல் வாங்கினேன்...
"தீ" என்று அறியாமல்... !?

கடைசி துடிப்பு...
அடங்கிக் கொண்டுள்ளது..
மெளனமாக - அவள்..

எரியுமோ.... எரியாதோ..
முடிவு தெரியாததனால்..
கடைசி நினைவாக....

கண்கள் கலங்குகின்றது
உருவங்கள் தெரியவில்லை
தேடுகின்றது - அவளை
மனது...

நினைவு தப்பிவிட்டது
நித்திரை தழுவிவிட்டது
நாளை என்கிறாள் - அவள்....

கடைசி மூச்சிலாவது
சொல்ல மாட்டாளா ....? - ஏன்
பிரிந்தாள் - என்னைவிட்டு...??

மனுவேந்தன்

உயிர்

கண்கள் என்றிருந்தேன்
கனவில் கூட
வரவில்லை....

இதயம் என்றிருந்தேன்
காற்றாக கூட
வரவில்லை....

உயிர் என்றிருந்தேன்
மூச்சாக கூட
வரவில்லை...

சகாப்தம் படைக்க..
காத்திருந்தேன்..
நிசப்தத்தில் - தொலைந்து விட்டேன்.....!!

மனுவேந்தன்

சந்திப்பு

அன்பே....
என்றோ நிகழ்ந்த
சந்திப்பில்..
எதையோ தொலைத்துவிட்டேன் - நான்

காலங்கள்.....
கரைந்தாலும்
ஞாபகங்கள் - கரைய
மறுக்க - நான்
எதையோ தொலைத்துவிட்ட
நினைவினிலே...

எப்பொழுது...
சந்திப்பேன் - உன்னை
தொலைந்துபோன - என்
நினைவுகளை மீட்டெடுக்க - உன்னை
எப்பொழுது சந்திப்பேன்...?

மனுவேந்தன்

அவளுக்கோர் கடிதம்

என் உயிர் என்னும்
உயில் கடிதம்
என் வாழ்க்கையெனும்
யுகத்தை இயக்கும்
கடவுளான -என்
காதலிக்கு ஒரு
கடிதம்.......

என்னுள் நீ நலம்
உன்னுள் நான் நலமா..?
மன்னிக்கவும்..!
உன்னுள் நான் இருக்கிறேனா?

இமயமாய் இருந்த என்னைப்
பனித்துளிப் பார்வையால்
துரும்பாகச் சுருக்கியவளே
மெளனம் என்னும்
கல்லெறிந்து - மனதினை
உடைத்தவளே...

நீ இல்லா -என்
வாழ்வில்
காலங்கள் கரையமறுத்து..
இரவுகள் உறங்க மறுக்கின்றன.. - இன்றாவது
எனக்கு நிம்மதியான
நித்திரை கொடு..... - உன்
கனவுகளை கொடுத்து.....!

என் எண்ணங்களை...
ஏடுகளில் பதிந்து...
ஏக்கமுடன் ஏவிடுவேன் - உனக்கு
விருப்பமில்லை என்று கூறி..
கிழித்து விடாதே
அவை...... - என்
இதயத்தின்
இராகங்கள்..... - என
பதிவுகளை...
என்னிடமே அனுப்பிவிடு

அந்தோணி

நினைவுகள்..

உருவங்கள் உனக்கு ஒழுங்காய் படைத்த இறைவன்
உண்மையான உள்ளத்தை படைக்க மறந்துவிட்டான்...
எத்தனைமுறை நடந்தாலும் அத்தனை பாதச் சுவடுகளையும்
அழிக்கும் கடல் அலையாய் உன் இதயம்.....
உன்னால் உயிரற்று போன என் இதயத்தில் - வலிகள்
மட்டுமில்லை உன் நினைவுகளும் போக மறுக்கிறது....
பிறந்த குழந்தைக்கு தெரியாது தான் பிறந்திருப்பது..
இறந்தவனுக்கு தெரியாது தான் இறந்திருப்பது..
அதுபோலத்தான் எனக்கும் தெரியாது உன்னை பிரிந்திருப்பது...
வெளியில் உன்னை வெறுத்தாலும், மானசீகமாகப்
பேசிக்கொள்கிறேன் என்னை ஆக்கிரமித்த - உன்
மெளன நினைவுகளுடன்.....

ரூபி
வளரும்....
©2006-2007 kodaionline | Web Design & Hosted : KODAIONLINE | About Us | Contact Us |Site Map |