kodaikanal
Google
 
Web www.kodaionline.com

முகப்பு

கட்டுரைகள் பகுதி

கவிதைகள்

உங்களுக்குத் தெரியுமா?

சினிமா செய்திகள்

கருத்துப் பரிமாற்றம்

விவசாயம்

பழவகைகள்

உங்கள் பக்கம்

கோடை செய்திகள்

நிகழ்வுகள்

துணுக்குகள்

கவிதைகள் பக்கம்

கவிதைகள் தொகுப்பு

இதயம்

என் இதயமே....
எங்கே சென்றாய்...
எத்தனையோ இடங்கள் எனக்குள் இருக்க..
எங்கே சென்றாய் ... எங்கே சென்றாய் - என்
இதயமே....!?

என் இதயமே...
நான் உனக்காக...
தவமிருக்க - என்
தவத்தினை கலைத்துவிட்டு
எங்கே சென்றாய் .. எங்கே சென்றாய் - என்
இதயமே....!?

நான்..
உன் வரவுகளுக்காக..
கதவுகளை திறந்து வைத்து
விழிகளை மூடாமல்..
கள்வனாய் விழித்திருக்க..
என் இதயமே...
எங்கே சென்றாய்.. எங்கே சென்றாய் - என்
இதயமே....!?
மனுவேந்தன்

கனவுகள்...

  

கனவுகாணுங்கள்...
கனவுகாணுங்கள்...
என்றார் - அக்னிபுத்திரன்..
நானும் காணுகின்றேன்
கனவுகளை...
என் எண்ணங்கள் ஏற்றம் பெறும் என்று..

நானும் காணுகின்றேன்
கனவுகளை...
என் இந்தியா
வளம் பெறும் என்று...!?

எத்தனை எத்தனையோ...
ஜாதிகளை சொல்லி...
ஜதிகள் சேரவிடாமல்..
மனித நேயத்தை மாய்த்து விட்ட
மனிதர்களிடம்...
நல்லதொரு மாற்றம் வரும் - என்று
நானும் காணுகின்றேன்..
கனவுகளை......

எண்ணங்களை ஏற்றமாக்க
நினைத்து.....
ஏணிப்படிகளை தேடி..
ஏக்கங்கள் மட்டுமே...
ஏமாற்றமாக நின்று விட -நான்
கனவு காணுகின்றேன்..
பகல் கனவு காணுகின்றேன்..!

மனுவேந்தன்

முயற்சி

சிந்தனைகளை...
சிதறும் மனமே...!
சிலகாலம் வாழும் - வண்ணத்துப் பூச்சி
சிந்திப்பதில்லை - வாழ்வைப்பற்றி..

எண்ணங்களை ஏற்றி
கண்களை மூடி....
கற்பனையில் வாழ்ந்து
நிஜத்தை மறந்து...
முயற்சிகளை முடக்கி
மூலையில் - ஏன்
முடங்குகின்றாய் - நீ...?!

மனுவேந்தன்

தொலைந்து போன மன்னவன்..

முகம் புதைக்க தெரியாமல்
முகாந்திரம் தேடியவனே...?
முகவரியை தொலைத்துவிட்டு
முகங்களை தேடுவதேன்....?

முள்ளில்லா ரோஜாவை..
முல்லையாய் பாவித்து
முள்குத்தியதென்று....
முகம் சுனங்கி நிற்பதேனோ....?

முத்தத்தினை கொடுத்து
முகத்தினை மறைத்து...
முகாரி இராகம் பாடி விட்டு
முன்கோபியாய் போவதென்ன..?

முகமறியா காலமதில்
முகவரி கொடுத்து விட்டு....
முன்னறைக்குள் ஒளிந்ததென்ன...?

மன்னவனே...
எங்கெங்கோ தேடியும்...
தேடல்களாய்...
தேங்கிப் போய்..
கன்னியின் - மனதில்
கவிதையாய்...
கலந்து விட்டாயோ....?

மனுவேந்தன்
வளரும்....
©2006-2007 kodaionline | Web Design & Hosted : KODAIONLINE | About Us | Contact Us |Site Map |